அமெரிக்காவிலும் ராகுல் லாரி பயணம்: இந்திய வம்சாவளி ஓட்டுனர்களுடன் கலந்துரையாடல்

புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கடந்த மாதம் டெல்லியில் இருந்து சண்டிகர் வரை லாரியில் பயணம் செய்தார். இந்த பயணத்தின்போது லாரி ஓட்டுனர்களுடன் ராகுல் பேசிக்கொண்டு வரும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகின. மேலும் தாபாவில் லாரி ஓட்டுனர்களுடன் ராகுல் கலந்துரையாடி அவர்களது குறைகளை கேட்டறிந்தார். இந்நிலையில் சமீபத்தில் ராகுல் காந்தி அமெரிக்காவிற்கு சென்றிருந்தார். இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் உள்ள மக்களின் நிலையை கேட்டறியும் வகையில் அங்கேயும் அவர் லாரியில் பயணம் மேற்கொண்டுள்ளார். ராகுலின் லாரி பயணம் குறித்த அறிக்கையை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

இதில், ‘‘ராகுல்காந்தி 190கி.மீ தூரம் அமெரிக்க லாரி யாத்திரை மேற்கொண்டார். வாஷிங்டன்னில் இருந்து நியூயார்க் வரை ஓட்டுனர் தல்ஜிந்தர் சிங் விக்கி கில் மற்றும் அவரது உதவியாளர் ரஞ்சித் சிங் பனிப்பால் ஆகியோருடன் பயணித்துள்ளார். இந்த பயணம் இந்திய வம்சாவளி லாரி ஓட்டுனர்களின் அன்றாட வாழ்க்கையை மையமாக கொண்டதாக இருந்தது. அமெரிக்க லாரிகள் ஓட்டுனரின் பாதுகாப்பு மற்றும் வசதியை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் இதுபோன்று இல்லை. இந்தியாவில் குறைந்த ஊதியம், எப்போதும் இல்லா அளவுக்கு விலை உயர்வு ஆகியவற்றுடன் வாழ்க்கையை சமாளிக்க போராடும் அதே நேரத்தில், அமெரிக்க லாரி ஓட்டுனர்கள் உழைப்புக்கேற்ற கண்ணியமான ஊதியத்தை கவுரத்துடன் பெறுகிறார்கள் என்பது எடுத்துக்காட்டப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

பத்திரப்பதிவுத் துறையில் அரசு வேலை எனக்கூறி ரூ.3 லட்சம் மோசடி..!!

பிரிட்டன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் ரிஷி சுனக் :மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் பேட்டி

மின் வேலி மீது மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு..!!