மிலிந்த் குமார் 155* ரன் விளாசினார்: அமீரகத்தை வீழ்த்தியது அமெரிக்கா


விண்ட்ஹோக்: நமீபியாவில் நேற்று நடந்த ஐசிசி ஆண்கள் உலக கோப்பை லீக்-2 போட்டியில் அமெரிக்கா 136 ரன் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை வீழ்த்தியது. டாஸ் வென்ற யுஏஇ பந்துவீச… அமெரிக்கா 50 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 339 ரன் குவித்தது. இந்திய வம்சாவளி வீரர்கள் ஸ்மித் படேல் 48 ரன், சாய்தேஜா முக்கமல்லா 107 ரன் (99 பந்து, 15 பவுண்டரி, 1 சிக்சர்), மிலிந்த் குமார் 155* ரன் (110 பந்து, 16 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசினர்.

அடுத்து களமிறங்கிய யுஏஇ 36.2 ஓவரில் 203 ரன்னுக்கு சுருண்டது. ஆசிப் கான் 51, ராகுல் சோப்ரா 52, பசில் ஹமீத் 50 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் பெவிலியன் திரும்பினர். அமெரிக்கா பந்துவீச்சில் நேத்ரவாக்கர், நோஸ்துஷ் தலா 3, ஜஸ்தீப் 2, ஷேட்லி வான், மிலிந்த் குமார் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். மிலிந்த் குமார் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இவர் டெல்லியில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

லெபனானில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 569ஆக அதிகரிப்பு

ஜம்மு காஷ்மீர் 2ம் கட்ட சட்டப்பேரவைத் தேர்தலில் 26 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு

நாடு முழுவதும் கடந்த ஓராண்டில் மட்டும் 60 புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைத்துள்ளோம்: ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா பேச்சு