அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கொட்டித்தீர்த்த கனமழை: குடியிருப்புகளில் இருந்து வெளியே வர முடியாமல் மக்கள் தவிப்பு

அமெரிக்கா: கலிபோர்னியா மாகாணத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்தது. கடற்கரை பகுதிகளில் கனமழை பெய்தது. சாலைகள் அனைத்து வெள்ளக்காடாக மாறின. பல வாகனங்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோல தெற்கு கலிபோர்னியாவில் உள்ள ஆக்சினாட், வென்சுரா பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்டன. அங்கிருந்து 100க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்து இருப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

பிளஸ் 1 மாணவி பாலியல் பலாத்காரம்: அத்தையின் கணவர் கைது