சட்டத்திருத்தம் கோரியவர் ரூ.1 லட்சம் டெபாசிட் செய்ய உயர் நீதிமன்றம் நிபந்தனை: உண்மைத்தன்மையை நிரூபிக்க உத்தரவு

சென்னை: நாட்டில் ஊழல் மற்றும் பொருளாதார குற்றங்களை தடுக்கும் வகையில் உள்ள சட்டங்களை கடுமையாக்கும் வகையில் திருத்தம் செய்யுமாறு மத்திய சட்ட ஆணையம், மாநில சட்ட ஆணையத்துக்கு அளித்த மனுவை பரிசீலிக்க கோரி சென்னையைச் சேர்ந்த ஜோசப் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த சட்டங்களில் என்ன திருத்தம் செய்ய வேண்டும், நீதிமன்றம் சட்டத்திருத்தம் கொண்டு வர விரும்புகிறீர்களா, தற்போதைய சட்டம் திறமையானதல்ல என்று எப்படி சொல்கிறீர்கள் என மனுதாரருக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதை தொடர்ந்து, இந்த வழக்கு பொது நலனுடன் தாக்கல் செய்யப்பட்டதாக தெரியவில்லை. விளம்பர நல வழக்காகவே தெரிகிறது என்று கூறிய நீதிபதிகள், வழக்கு தொடர்ந்த மனுதாரர், தனது உண்மைத்தன்மையை நிரூபிக்கும் வகையில் ஒரு லட்சம் ரூபாயை இரு வாரங்களில் உயர் நீதிமன்ற பதிவாளரிடம் டெபாசிட் செய்யுமாறு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

Related posts

சிலாவட்டம் ஊராட்சியில் புதிய குளம் வெட்டும் பணி மும்மரம்

மாணவன் மாயம்

சாலையில் வழிந்தோடும் கழிவுநீரை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்