குழாய் இணைப்பு பணி காரணமாக அம்பத்தூர் மண்டலத்தில் இன்று குடிநீர் விநியோகம் நிறுத்தம்: குடிநீர் வாரியம் தகவல்


அம்பத்தூர்: கோயம்பேடு மேம்பாலத்திற்கு அருகே குழாய் இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இன்று அம்பத்தூர் மண்டலத்திற்க்குட்பட்ட பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட அறிக்கை: கோயம்பேடு மேம்பாலத்திற்கு அருகில் உள்ள குடிநீர் பிரதான குழாயுடன் செம்பரம்பாக்கம் 530 எம்.எல்.டி குடிநீர் பிரதான குழாயினை இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இன்று காலை 9 மணி முதல் நாளை காலை 9 மணி வரை (24 மணி நேரம்) மண்டலம்-7 (அம்பத்தூர்)-க்குட்பட்ட முகப்பேர் கிழக்கு, முகப்பேர் மேற்கு, அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம், பாடி மற்றும் திருமங்கலம் ஆகிய பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் https://cmwssb.tn.gov.in என்ற இணையதள முகவரியினை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம். மேலும், குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும். மேலும், கூடுதல் தகவல்களுக்கு 044-4567 4567 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related posts

பிரபல இந்தி நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு தாதா சாகேப் பால்கே விருது : ஒன்றிய அரசு அறிவிப்பு!!

மதுரையில் கேந்திரிய வித்யாலயா உள்பட 8 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்..!!

சாத்தூர் அருகே மின்கம்பத்தை தொட்டபோது மின்சாரம் தாக்கியதில் குழந்தை உயிரிழப்பு