அம்பானி வீட்டு திருமணத்தால் ஊழியர்களுக்கு Work From Home வழங்கிய IT நிறுவனங்கள்..!!

மும்பை: முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் மும்பையில் நடைபெறவுள்ளதை ஒட்டி, நகரத்தின் மிகப்பெரிய IT பூங்காக்களில் ஒன்றான பாண்ட்ரா குர்லா வளாகத்தில் உள்ள நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை 15ம் தேதி வரை Work From Home எடுத்துக்கொள்ள அறிவுறுத்தியுள்ளனர். ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சண்டின் திருமணம் மும்பையில் நடைபெற உள்ளது. இதற்காக பல ஏற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர் அம்பானி குடும்பத்தினர். முன்னதாக திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் குஜராத் மாநிலம் ஜாம்நகரிலும், வெளிநாடுகளிலும் நடைபெற்றன.

இந்த வார தொடக்கத்தில் சங்கீத் நிகழ்ச்சியும் நடந்தது. முக்கிய விருந்தினர்கள் வருவார்கள் என்பதால், பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸில் இருக்கும் ஜியோ வேல்டு சென்டருக்கு செல்லும் சாலைகள் அனைத்தும் 12-ம் தேதியில் இருந்து 15-ம் தேதி வரை மூடப்பட்டு இருக்கும் என்று மும்பை போலீசார் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் அம்பானி வீட்டு திருமணத்தில் பங்கேற்க உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து தொழிலதிபர்கள், பிரபலங்கள் வரவுள்ளதை ஒட்டி, போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு பாண்ட்ரா குர்லா வளாகத்தில் உள்ள நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை 15ம் தேதி வரை Work From Home எடுத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளது.

 

Related posts

செஞ்சி அடுத்த அனந்தபுரம் கிராமத்தில் கிணற்றில் குளித்த 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

ஐ.நா அளவுகோலை விஞ்சி 836 இந்தியருக்கு 1 மருத்துவர்: மக்களவையில் அமைச்சர் தகவல்

தீவிரவாதச் சம்பவங்கள் அதிகரிப்பு; 2 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் நீக்கம்: சொந்த கேடருக்கு அனுப்பிவைப்பு