அமாவாசை முன்னிட்டு இன்று கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை சற்று உயர்ந்தது

அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலை சற்று உயர்ந்துள்ளது.விசேஷ நாட்கள் மற்றும் முகூர்த்த நாட்கள் இல்லாத காரணத்தால் நேற்று கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலை சரிந்ததால் ஒரு கிலோ மல்லி 200க்கும் ஜாதி மல்லி, முல்லை 150 க்கும் கனகாம்பரம் 300 க்கும் அரளி 100 க்கும் விற்பனை செய்யப்பட்டது. சம்பங்கி 30க்கும் பன்னீர் ரோஸ் 40க்கும் சாக்லேட் ரோஸ் 60க்கும் விற்பனை செய்யப்பட்டுவந்தது.

இன்று அமாவாசை முன்னிட்டு, கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மல்லி 300 க்கும் ஜாதி மல்லி, முல்லை 200 க்கும் கனகாம்பரம் 400 க்கும் அரளி 150 க்கும் சாமந்தி 270 க்கும் சம்பங்கி 50 க்கும் பன்னீர் ரோஸ் 60க்கும் சாக்லெட் ரோஸ் 80க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related posts

மின்சார கார் உற்பத்தி மையமாக திகழும் தமிழ்நாடு! : சென்னையில் மின்சார கார்கள் தயாரிக்க ஃபோர்டு ஆலோசனை!!

மராட்டிய மாநிலம் புனேவில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து!!

ரஜினிகாந்த் சீராகத் தேறி வருகிறார் என்பது நெஞ்சுக்கு நிம்மதி தருகிறது: கவிஞர் வைரமுத்து பதிவு