சாலையோரங்களில் ரெட் லீப் மரங்கள் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் சாலை ஓரங்களில் ரெட் லீப் மரங்கள் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களை கவர்ந்து வருகின்றன.
நீலகிரி மாவட்டத்தில் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா உட்பட பல்வேறு பூங்காக்கள் உள்ளன. இவைகளில் பல்வேறு வகையான மலர் செடிகளில் மலர்கள் பூத்துக் காணப்படும். இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.

இதுமட்டுமின்றி நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு வகையான காட்டுச் செடிகளில் மலர்கள் பூத்து அவ்வப்போது சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. குறிப்பாக, சில மரங்களில் பூக்கும் மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. ஜெகரண்டா, செர்ரி, பிளேம் ஆப் தி பாரஸ்ட், சேவல் கொண்டை மலர்கள் மற்றும் ரெட் லீப் மரங்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. தற்போது நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் செல்லும் சாலைகளில் ஓரங்களில் சிவப்பு இலைகளைக் கொண்ட சிறிய ரக மரங்கள் அதிக அளவு காணப்படுகின்றன.

இதனை ரெட் லீப் மரங்கள் என அழைக்கப்படுகிறது. இதில், தற்போது அனைத்து இலைகளும் சிவப்பு நிறத்தில் காணப்படுவதால் இது சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களை கவர்ந்து வருகிறது. பெரும்பாலான சுற்றுலா பயணிகள் இந்த மரங்களின் அருகே நின்று புகைப்படங்களை எடுத்துச் செல்கின்றனர். ஊட்டியில் இருந்த அணிக்கொரை செல்லும் சாலை உட்பட மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளுக்குச் செல்லும் சாலை ஓரங்களில் இந்த ரெட் லீப் மலர் செடிகள் அதிக அளவு காணப்படுகின்றன. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.

Related posts

10 மணிநேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம்

கன்னியாகுமரியில் பிரபல ரவுடி கைது..!!

திருச்சி அருகே பரபரப்பு; சுட்டு பிடிக்கப்பட்ட ரவுடி