ஆல்மண்ட் காலிஃப்ளவர் ரைஸ் சாலட்

தேவையானவை :

தோல் உறிக்கப் படாத பாதாம் – 1 கப்,
துருவிய காலிஃப்ளவர் – 2 கப்,
உப்பு – சுவைக்கு ஏற்ப,
மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன்,
கொத்தமல்லி தழை – 1 மேசைக்கரண்டி,
எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்,
நறுக்கிய இஞ்சி – 1 டீஸ்பூன்,
நறுக்கிய பச்சை மிளகாய் – 1 டீஸ்பூன்,
சீரகம் – 1/2 டீஸ்பூன்,
ஆலிவ் எண்ணெய் – 2 மேசைக்கரண்டி

செய்முறை :

பாதாமினை நான்கு நிமிடம் 180 டிகிரியில் மைக்ரோவேவ் அவனில் வறுக்கவும். மைக்ரோ அவன் இல்லை என்றால் சாதாரண சட்டியில் வறுக்கலாம். பிறகு ஆறியதும் மெல்லியதாக சீவிக் கொள்ளவும். ஒரு கடாயில் ஆலிவ் எண்ணெய் சேர்த்து அதில் சீரகம் பொரிந்ததும் இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். இதில் துருவிய காலிஃப்ளவரை சேர்த்து நன்கு வேகும் வரை வதக்கவும். அதன் பிறகு அடுப்பை நிறுத்திவிட்டு அதில் எலுமிச்சை சாறு, கொத்தமல்லி தழை, மிளகுத்தூள், உப்பு மற்றும் பாதாமினை சேர்த்து நன்கு கலக்கவும். சுவையான சத்துள்ள சாலட். டயட் இருப்பவர்களுக்கு இது மிகவும் ஆரோக்கியமான உணவு.

Related posts

பீர்க்கங்காய் துவையல்

குதிரைவாலி இனிப்பு ஆப்பம்

சிவப்பு சோள அடை