வண்டல் மண் எடுக்க 3ம் தேதி முதல் இணையதள அனுமதி

சென்னை: சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகள், 6 ஆயிரத்து 700க்கும் மேற்பட்ட ஊரகவளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள ஏரிகள் மட்டுமல்லாமல் தாலுகாவில் உள்ள நீர்நிலைகளிலும் வண்டல் மண்ணை எடுத்துக்கொள்ளலாம். எனவே, விவசாயிகள் வரும் ஜுலை 3ம் தேதி முதல் இ-சேவை மையங்கள் மூலமாக, இணையதளத்தில் விண்ணப்பித்து அனுமதி பெற்று வண்டல் மண் எடுத்து பயன்பெற்றுக்கொள்ளலாம் என்றார்.

Related posts

மெத்தனால் பதுக்கிய பெட்ரோல் பங்க்-கிற்கு சீல்!

கள்ளச்சாராயம் விற்ற 5 பேர் மீது குண்டர் சட்டம்

டி20 உலக கோப்பை வென்று தாயகம் திரும்பிய இந்திய வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு..!