குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி


தென்காசி: குற்றாலத்தில் கடந்த 2 தினங்களுக்குப் பிறகு நேற்று மதியம் முதல் சாரல் பெய்தது. இரவு வரை தொடர்ந்து பெய்த சாரல் காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவை தாண்டி தண்ணீர் விழுந்தது. ஐந்தருவியில் சில பிரிவுகள் ஒன்றாக இணைந்து தண்ணீர் விழுந்தது. பழைய குற்றால அருவியிலும் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் இரவு முதல் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி ஆகிய பிரதான அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர்.

இந்நிலையில் இன்று காலை வெள்ளப்பெருக்கு கட்டுக்குள் வந்ததை அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி என அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குஷியாக குளித்து மகிழ்கின்றனர். விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது.

Related posts

அல்லி மாயார் பழங்குடியின மக்கள் விவசாய பொருட்களை கொண்டு செல்ல வனத்துறையினர் தடை விதித்ததாக குற்றச்சாட்டு

திராவிட மாடல் அரசின் பல்வேறு சீர்மிகு திட்டங்களால் கல்வித் தரத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது : தமிழக அரசு பெருமிதம்

கிண்டி ரேஸ் கிளப் கோரிக்கையை நிராகரித்தது சென்னை உயர்நீதிமன்றம்..!!