69% இட ஒதுக்கீட்டை பாதுகாப்பதற்கு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: கோடை விடுமுறைக்குப் பிறகு உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் வரும் 8ம் தேதி தொடங்க உள்ள நிலையில், தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு எந்த நேரமும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்ற காரணத்தை முன்வைத்து 69சதவீத இடஒதுக்கீடு உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டால் அதன் விளைவுகளை நினைத்துப் பார்க்கக் கூட முடியவில்லை. எனவே, தமிழ்நாட்டில் தனிப்பெரும் அடையாளங்களில் முதன்மையானது 69சதவீத இட ஒதுக்கீடு ஆகும். அந்த கடமையை நிறைவேற்றும் வகையில், இனியும் தாமதிக்காமல் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும்.

 

Related posts

வழக்கறிஞர்களுக்கும் சிக்கலை ஏற்படுத்தும் புதிய ஷரத்துகளை சேர்த்துள்ளதால் குற்றவியல் சட்டங்களில் குழப்பங்கள்: பாரதிய நாகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா குறித்து சட்ட நிபுணர்கள் கருத்து

சொல்லிட்டாங்க…

அமைச்சரின் உத்தரவை ரத்து செய்து புல்லட்சாமிக்கு கவர்னர் அதிர்ச்சி வைத்தியம் அளித்தது பற்றி சொல்கிறார்: wiki யானந்தா