அலோபதி மாத்திரை தயாரித்த மூலிகை நிறுவன அதிபர் கைது


புதுடெல்லி: அரியானாவின் ஹிசாரில் உள்ள பயோகேஸ் புட்ஸ் அண்ட் எக்ஸ்ராக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் உரிமையாளர் டாக்டர் நவீன் அகர்வால். இவர் இந்திய சாதனையாளர் விருது மற்றும் கடந்த ஆண்டு சிறந்த தலைமை நிர்வாக அதிகாரிக்கான விருதை பெற்றவர். இவரது நிறுவனம் மூலிகை மருந்துகள் தயாரித்து வந்தது. இந்நிலையில் இவரது நிறுவனத்தில் சட்டவிரோதமாக அலோபதி டாக்டர்கள் பரிந்துரைக்கும் அல்பிரசோலம் என்ற மாத்திரைகள் சட்டவிரோதமாக தயாரித்து விநியோகம் செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இந்த மாத்திரையானது மனேசார்பு, பதற்றம், பீதி உள்ள நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிக்சையில் பயன்படுத்தப்படுவதாகும்.

இது தொடர்பாக கடந்த மார்ச் மாதம் ராஜேந்தர் பிரசாத் மிஸ்ரா என்பவரை டெல்லியின் பிரிஜ்புரியில் போலீசார் கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் அல்பிரசோம் மாத்திரையை போதைப்பொருளாக விநியோகம் செய்யும் சங்கிலியை போலீசார் கண்டறிந்தனர். இதனை தொடர்ந்து நவீன் அகர்வால் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Related posts

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்த புகாரில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்கு பதிய உத்தரவு: பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அதிரடி

டாக்டர் வீட்டில் 65 சவரன் திருடிய இளம்பெண் கைது

வக்பு சட்டத்திருத்த மசோதா குறித்து கருத்தரங்கு; காதர் மொகிதீன் தலைமையில் நடந்தது