‘ஆல் இண்டியா ரேடியோ’ இனிமேல் ‘ஆகாஷ்வானி’

புதுடெல்லி: ‘ஆல் இண்டியா ரேடியோ’ இனி ‘ஆகாஷ்வானி’ என அழைக்கப்படும் என அறிவிப்பு வௌியாகியுள்ளது. பொதுமக்களின் மிகவும் பழமை வாய்ந்த பொழுதுபோக்கு சாதனம் வானொலி. ‘இந்தியன் பிராட்காஸ்டிங் சர்வீஸ்’ என்ற பெயரில் இதன் ஒலிபரப்புகள் தொடங்கின. பின்னர் 1936ம் ஆண்டுக்கு பிறகு ‘ஆல் இண்டியா ரேடியோ‘ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த பெயரும் கடந்த 1957ம் ஆண்டு ‘ஆகாஷ்வானி’ என்று பெயர் மாற்றப்பட்டது. ஆனால் நிகழ்ச்சிகள், செய்திகள் தொடங்வதற்கு முன், ‘ஆல் இண்டியா ரேடியோ’ என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் இனி ‘ஆல் இண்டியா ரேடியோ‘ என்பதற்கு பதிலாக ‘ஆகாஷ்வானி’ என்றே சொல்ல வேண்டும் என பிரசார் பாரதி அறிவிப்பு வௌியிட்டுள்ளது.

Related posts

வாதங்கள் நிறைவடைந்த ஒரு வழக்கில் புதிய சாட்சியங்களை விசாரிக்க சட்டத்தில் இடமில்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

திருப்பதியில் லட்டு கலப்பட விவகாரம்; திண்டுக்கல் ஏஆர் டெய்ரி உரிமையாளர் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல்

பிரதமர் குறித்த கார்கேவின் கருத்து வெறுக்கத்தக்கது: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கண்டனம்