கூட்டணிக்காக அதிமுக, பாஜவில் இருந்து அழைப்பு: சரத்குமார் ஹேப்பி

நெல்லைக்கு நேற்று வந்த ச.ம.க. தலைவரும் நடிகருமான சரத்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: கும்பகோணத்தில் கடந்த 24ம் தேதி நடந்த சமக உயர்மட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கூட்டணி குறித்து ஒருமித்த கருத்து எட்டவில்லை. ஆனாலும் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த எனக்கு முழு அதிகாரம் வழங்க நிர்வாகிகள் முடிவு எடுத்துள்ளனர். கருத்து கேட்பு கூட்டத்தில், எங்கள் நோக்கம் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நோக்கி பயணிப்பதுதான் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் இடையில் நாடாளுமன்ற தேர்தல் வருவதால் அதிலும் நாங்கள் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் போட்டியிடவில்லை என்றால் இயக்கத்திற்கு தொய்வு ஏற்பட்டு விடும்.

நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் எங்கு போட்டியிட்டாலும் வெற்றி பெறுவோம். கூட்டணிக்காக அதிமுக, பாஜவில் இருந்து அழைப்பு வந்துள்ளது. இரண்டு கட்சிகளும் எங்களுடன் தொடர்பில் இருந்து வருகின்றனர். அதில் இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை. இன்னும் ஒரு வாரத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் நான் பொறுப்பாளராக உள்ளேன். நான் நெல்லை தொகுதியில் போட்டியிட வேண்டுமா?, வேண்டாமா? என்பது எனது முடிவாகும். எங்களது கொள்கை சார்ந்த கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது