கூட்டணிக்கு வராவிடில் அதிமுக பெரிய விலை தர நேரிடும்: பாஜக

சென்னை: தங்களுடன் கூட்டணிக்கு வராவிடில் அதிமுக பெரிய விலை கொடுக்க நேரிடும் என பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் தெரிவித்துள்ளார். பாஜகவுடன் கூட்டணிக்கு வராவிடில் வரும் காலங்களில் அரசியல் ரீதியாக அதிமுகவினர் மிகவும் வருத்தப்படுவார்கள். பா.ஜ.க.வை சாதாரணமாக கருதுகிறார்கள்; ஆனால் அப்படியில்லை என்பதைத் தேர்தலுக்குப் பிறகு தெரிந்துகொள்வார்கள். எடப்பாடி தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும், 13% இஸ்லாமிய வாக்குகளில் 1% வாக்குகளை பெறுவதே கடினம். 2019, 2021- பாஜகவுடன் கூட்டணி வைத்த அதிமுக, இப்போது பசுத்தோல் போர்த்திய புலிபோல் இருந்தால் அதை நம்ப மக்கள் முட்டாள்கள் இல்லை. எடப்பாடி பழனிசாமி இந்துக்களின் வாக்குகளையும், சிறுபான்மையினர் வாக்குகளையும் இழக்கப்போகிறார் இவ்வாறு கூறினார்.

Related posts

ஐசிசி உலக கோப்பை டி20 பைனல்: கடைசி ஓவரில் இந்தியா த்ரில் வெற்றி; 7 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி அசத்தல்

ஆன்லைன் வர்த்தகத்தில் லாபம் ஈட்டலாம் என பல் மருத்துவரிடம் ரூ.1.20 கோடி மோசடி : இருவர் கைது

சிபிஐ அதிகாரி போல் பேசி ரூ50 லட்சம் மோசடி செய்த கேரள வாலிபர் பிடிபட்டார்: சொகுசு கார், 47 ஏடிஎம் கார்டுகள் பறிமுதல்