அரசியல் கட்சிகளின் சின்னத்தில் கூட்டணி கட்சியினர் போட்டியிட தடை விதிக்க முடியாது: ஐகோர்ட்

சென்னை: அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் சின்னத்தில் கூட்டணி கட்சியினர் போட்டியிட தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கூட்டணி சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றியை செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவிக்க உத்தரவிட கோரி வழக்கு தொடரப்பட்டது. தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் எம்.எல்.ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடந்தார். இந்த வழக்கில் நீதிமன்றம் தலையிட முடியாது; தேர்தல் வழக்காகத்தான் தொடரமுடியும் என கூறி வழக்கு தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

 

Related posts

என்ஆர் காங்.- பாஜ கூட்டணியில் விரிசல் முற்றுகிறது: பாஜ எம்எல்ஏ கல்யாணசுந்தரம் பரபரப்பு பேட்டி

3 புதிய குற்றவியல் சட்டங்கள்.. எதற்காக இந்த சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன?: காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி

கடலூரில் பாமக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு..!!