பவன்கல்யாணுக்கு சீட் விட்டுக்கொடுத்த தெலுங்குதேசம் மாஜி எம்எல்ஏவிடம் ரகளை, கார் மீது தாக்குதல்: ஜனசேனா கட்சி மீது குற்றச்சாட்டு

திருமலை: ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் காக்கிநாடா மாவட்டம் பிட்டாபுரம் சட்டமன்ற தொகுதியில் நடிகர் பவன்கல்யாண் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.அந்த தொகுதியை தெலுங்குதேசம் கட்சியின் எம்எல் வர்மா விட்டுக்கொடுத்தார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை பித்தாபுரம் தொகுதிக்கு உட்பட்ட ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை ேசர்ந்த நிர்வாகிகள் சுமார் 100 பேர், முன்னாள் எம்எல்ஏ வர்மா முன்னிலையில் தெலுங்கு தேசம் கட்சியில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது அங்கு வந்த அந்த தொகுதியை சேர்ந்த ஜனசேனா கட்சியினர், `ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள், தேர்தலில் எங்களுக்கு எதிராக வேலை பார்த்தனர்.

அவர்களை எங்களுக்கு தெரியப்படுத்தாமல் தெலுங்கு தேசம் கட்சியில் எப்படி இணைக்கலாம்?’ எனக்கூறி ஆத்திரமடைந்து வாக்குவாதம் செய்தனர். பின்னர் வர்மாவின் காரை அடித்து நொறுக்கி தகராறு செய்துவிட்டு சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கூட்டணி கட்சி முன்னாள் எம்எல்ஏவின் கார் மீது ஜனசேனா கட்சியினர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

மதுரை, கோவை மெட்ரோ ரயில் வழித்தடங்களில் ஆசிய முதலீட்டு வங்கியின் பிரதிநிதிகள் நாளை நேரில் ஆய்வு : ரூ.22,108 கோடி முதலீடு செய்ய திட்டம்

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு தேவை: மக்களவையில் அகிலேஷ் யாதவ் பேச்சு

விநாயகர் சிலை அகற்றப்பட்டதை எதிர்த்து போராட்டம்..!!