அனைத்து மாவட்டங்களிலும் தானியங்கி வானிலை கருவி: தென்மண்டல மைய தலைவர் தகவல்

வேலூர்: தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலகிருஷ்ணன் நேற்று வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக மைய வளாகத்தில் கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகளுக்கான வானிலை சேவைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தொடர்ந்து அவர் அளித்த பேட்டி: விவசாயிகளுக்கு வானிலை குறித்த தகவல்களை தருவதற்காக வானிலை சேவை மையம் 1932ல் புனேவில் உருவானது. தற்போதைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் அடிப்படையில் செயற்கை கோள்கள், ரேடார்கள் மூலம் வானிலையில் ஏற்படும் மாற்றங்களை கணினி மூலம் கண்டறிந்து வேளாண்மை, கால்நடைகளுக்கு தேவையான தகவல்கள் அடுத்து வரும் 5 நாட்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் 1875ல் தொடங்கப்பட்டு 2025ல் 150வது ஆண்டு கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு வானிலை தரவுகளை அதிக இடங்களில் பதிவு செய்வதற்கான நடவடிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு முழுவதும் எல்லா மாவட்டங்களிலும் தானியங்கி மழை மானி, தானியங்கி வானிலை ஆய்வு கருவிகள் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

ரூ.1 கோடியில் புதுப்பொலிவு பெறும் அருங்காட்சியகம் கோட்டையில் சுற்றுலா பயணிகளை கவரும் தத்ரூப டைனோசர்

ரயில், விமான டிக்கட் முன்பதிவு உட்பட ஒரே மொபைல் ஆப்பில் அனைத்து ரயில் சேவைகள் : தெற்கு ரயில்வே அதிகாரிகள் தகவல்

திருச்சியில் நள்ளிரவு காளி கோயிலில் அகோரிகள் நடத்திய நவராத்திரி பூஜை : மேளம் அடித்து சங்கு நாதங்கள் முழக்கம்