300 ச.மீ கட்டிட பரப்பளவில் 14 மீ. உயரத்திற்குள் அனைத்து வணிக கட்டிடங்களுக்கும் சான்று பெற விலக்கு: அமைச்சர் முத்துசாமி அறிவிப்பு

சென்னை: சட்டப்பேரவையில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை மீதான மானிய கோரிக்கை மீது நடந்த விவாதத்திற்கு பதில் அளித்து வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:

 தமிழ்நாட்டில் ஏதேனும் ஒரு நகரில் உள்ளூர் திட்ட பகுதிக்கான நிலச் சேர்ம பகுதி வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும்.

 முழுமை திட்ட நில உபயோக வகைபாடுகளை பொதுமக்கள் அறிந்துகொள்ள ‘‘நிலப்பையன் தகவல் அமைப்பு” (Land Use Information System) உருவாக்கப்படும்.

 300 சதுர மீட்டருக்குள் கட்டிட பரப்பளவு கொண்ட 14 மீட்டர் உயரத்திற்குள் உள்ள அனைத்து வணிக கட்டிடங்களுக்கும் கட்டிட முடிவு சான்று பெறுவதில் இருந்து விலகளிக்கப்படும்.

 தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் ஈரோடு மாவட்டம் சம்பத் நகரில் 108 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும்.

 திருவண்ணாமலை மற்றும் மதுரையில் 2 கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களுக்கு சொந்தமான நிலங்களில் எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் ரூ.1 கோடி 30 லட்சம் செலவில் கட்டப்படும்.

 சென்னை, கோவை, திருச்சி, சேலம், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் 10 கூட்டு வசதி சங்கங்களில் ரூ.57 லட்சம் திட்டம் மதிப்பீட்டில் பாதுகாப்பு அறையுடன் கூடிய இரும்பு பெட்டகங்கள் அமைக்கப்படும்.

 செங்கல்பட்டு மற்றும் மதுரை மாவட்டத்தில் உள்ள இரண்டு கூட்டுறவு வீட்டு வசதி சமையலுக்கு சொந்தமான நிலத்தில் ரூ.70 லட்சம் திட்டம் மதிப்பீட்டில் வணிக வளாகங்கள் கட்டப்படும்.

 சென்னை பெருநகர பகுதிக்கு புதிய வாகன கொள்கை உருவாக்கப்படும்.

 மாநிலத்தின் போக்குவரத்து திட்டமிடல் திறனை மேம்படுத்தும் வகையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய பாட பிரிவாக போக்குவரத்து திட்டமிடல் பட்டம் மேற்படிப்பு அறிமுகப்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

ஆசிய முதலீட்டு வங்கி பிரதிநிதிகள் நாளை ஆய்வு..!!

சிறை அலுவலர்கள், உதவி சிறை அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

நாட்டு மக்களின் வளர்ச்சியே நமது குறிக்கோள்: பிரதமர் மோடி பேச்சு