மது பிரியர்களின் கூடாரமாக மாறிய நெற்களம்

*விவசாயிகள் வேதனை

ரெட்டிச்சாவடி : கடலூர் மாவட்டம் கே.ஆர் சாவடி – செல்லஞ்சேரி செல்லும் சாலை இருபுறமும் மூன்று போகமும் விளையக்கூடிய விவசாய நிலங்கள் உள்ளது. இதனால் அதிக அளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்தப் பகுதியை சுற்றியுள்ள விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை காய வைப்பதற்காக இந்தப் பகுதியில் உள்ள நெல் களத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால் மது பிரியர்களுக்கு இந்த காற்றோட்டமான களம் எந்தவித டென்ஷனும் இல்லாமல் அமைதியாக நண்பர்களுடன் அமர்ந்து குடிப்பதற்கு ஏற்ற இடமாக அமைந்துள்ளது என்பதனை குறிப்பதுபோல் தினந்தோறும் மதுபிரியர்கள் இங்கு அமர்ந்து மது குடித்து சென்று வருகின்றனர். இதன் காரணமாக நெல் களத்தில் மதுபாட்டில்கள் அதிக அளவில் கிடக்கிறது மேலும் மது பாட்டில்கள் முழுவதும் உடைந்து கண்ணாடி துகள்கள் ஆங்காங்கே சிதறி கிடக்கிறது.

மேலும் ஒரு சில மது பிரியர்கள் அதிக போதை காரணமாக மது பாட்டில்களை உடைத்து வீசி செல்வதால் நெல் உலர வைக்க வரும் விவசாயிகளுக்கு அடிக்கடி காயம் ஏற்பட்டு வருவதையும் காண முடிந்தது. இதனால் இரவு நேரங்களில் இவ்வழியாக செல்லக்கூடிய பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.இந்த நெல் களத்தில் மதுபிரியர்கள் மது குடிப்பதற்கு இடமாக மாறியது விவசாயிகள் மத்தியில் வேதனை ஏற்படுத்தி உள்ளது. எனவே இரவு நேரங்களில் போலீசார் வாகன ரோந்து பணியில் ஈடுபட்டு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுப்பார்களா? என பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

Related posts

தஞ்சையில் எண்ணெய் பனை சேவை மையம் திறப்பு

மணிப்பூரில் முகாம்களில் உள்ள மக்களை சந்தித்தார் ராகுல்

விவசாய பயன்பாடு, மண்பாண்டம் செய்வதற்கு கட்டணமின்றி மண் அள்ள அனுமதி: ஆணைகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்