அல்காசர் பேஸ்லிப்ட் கார்

ஹூண்டாய் நிறுவனம், அல்காசர் பேஸ்லிப்ட் காரை விரைவில் சந்தைப்படுத்த இருக்கிறது. இதற்கான சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. தென்கொரியாவில் இந்த காரின் சோதனை ஓட்டம் தொடர்பான படங்கள் இணையதளங்களில் வெளியாகியுள்ளன. புதிய வடிவத்தில் கிரில் டிசைன், அலாய் வீல்கள், வெர்டிக்கல் எல்இடி டெயில் லைட்டுகள் இடம் பெற்றுள்ளன. 6 சீட் மற்றும் 7 சீட் வேரியண்ட்களில் கிடைக்கும் எனவும், இதில் தற்போதைய அல்காசர் காரில் உள்ள அதே இன்ஜின் இடம் பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.தற்போது சந்தையில் உள்ள அல்காசர் காரில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் 160 பிஎஸ் பவரையும், 253 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் 116 பிஎஸ் பவரையும் 250 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இந்த ஆண்டு இரண்டாம் அரையாண்டில் விற்பனைக்கு வரலாம் என தெரிகிறது. இந்தியாவிலும் சந்தைப்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் இதன் ஷோரூம் விலை சுமார் ரூ.17 லட்சமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்

74000 பேர் பனிலிங்க தரிசனம்