ஆலந்தூர் பிரதான சாலையில் 16ம் தேதி வரை போக்குவரத்துக்கு தடை: போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு

இன்று முதல் வரும் 16ம் தேதி வரை 4 நாட்களுக்கு ஆலந்தூர் பிரதான சாலையில் போக்குவரத்திற்கு தடை விதித்து போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை கிங்ஸ் இன்ஸ்ட்டிட்யூட் அருகில் வருகின்ற 15ம் தேதி தமிழ்நாடு முதல்வரால் திறந்து வைக்கப்படவுள்ளது. இது தொடர்பான பணி, பொது பணிதுறையினரால் சைதாப்பேட்டை விளக்கு சந்திப்பு மற்றும் தேசிய திறன் பயிற்சி நிறுவனத்திற்கு இடையிலான ஆலந்தூர் பிரதான சாலையில் நடந்து வருவதால், இன்று முதல் வரும் 16ம் தேதி வரை 4 நாட்களுக்கு ஆலந்தூர் பிரதான சாலை தற்காலிகமாக போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

* போக்குவரத்து மாற்றம் வழிகள்

* அண்ணாசாலையிலிருந்து கிண்டி திருவிக தொழிற்பேட்டை ஆலந்தூர் பிரதான சாலை வழியாக ஆலந்தூர் ஆடு தொட்டி பாலம் கடந்து சைதாப்பேட்டை செல்லும் அனைத்து வாகனங்களும் கிண்டி எஸ்டேட் பேருந்து நிலையத்திலிருந்து வலதுபுறம் திரும்பி அண்ணாசாலை வழியாக சைதாப்பேட்டையை சென்றடையலாம்.

* அண்ணாசாலை கிண்டி மார்க்கத்திலிருந்து திருவிக தொழிற்பேட்டை செல்லும் வாகனங்கள் கிண்டி எஸ்டேட் பேருந்து நிலையத்திலிருந்து இடதுபுறமாக திரும்பி வாட்டர் டேங்க் ரவுண்டானா சென்று தாங்கள் செல்லும் இலக்கை அடையலாம்.

* சைதாப்பேட்டை பஜார் ரோட்டிலிருந்து ஆலந்தூர் ஆடுதொட்டி பாலம் வழியாக கிண்டி திருவிக எஸ்டேட் செல்லும் வாகனங்கள் சைதாப்பேட்டை ஆலந்தூர் மெயின்ரோடு ஐந்துலைட் சந்திப்பில் வலதுபுறமாக திரும்பி மசூதி தெரு வழியாக மாந்தோப்பு பள்ளி சந்திப்பு சென்று கோடம்பாக்கம் சாலை வழியாக கோவிந்தன் ரோடு அசோக்நகர் 11வது அவென்யூ, 100 அடி சாலை மற்றும் காசிபாலம் வழியாக சென்று சிப்பட் சந்திப்பில் இடது புறம் திரும்பி வாட்டர் டேங்க் சாலை வழியாக கிண்டி இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் அடையலாம்.

* சைதாப்பேட்டை பஜார் ரோட்டிலிருந்து கிண்டி செல்லும் வாகனங்கள் பஜார் ரோட்டிலிருந்து ஐந்துலைட் சந்திப்பில் வலதுபுறமாக திரும்பி மசூதி தெரு வழியாக மாந்தோப்பு பள்ளி சந்திப்பு சென்று வலதுபுறமாக திரும்பி கிழக்கு ஜோண்ஸ் சாலை பவளவண்ணன் சுரங்கப்பாதையை அடைந்து அண்ணாசாலையை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

* கிண்டி எஸ்டேட் பேருந்து நிலையத்திலிருந்து ஆலந்தூர் சாலை மற்றும் ஆலந்தூர் ஆடு தொட்டி பாலம் கடந்து பட்டாபிராம் செல்லும் 70F மாநகர பேருந்து மற்றும் அசோக்நகர் வழியாக டிபன்ஸ் காலனி செல்லும் மினி மாநகர சிற்றுந்து எஸ்டேட் பேருந்து நிலையத்திலிருந்து இடதுபுறமாக திரும்பி வாட்டர் டேங்க் ரோடு ரவுண்டானா சென்று இடதுபுறம் திரும்பி 100 அடி சாலை-சிப்பட் சந்திப்பு வழியாக செல்லலாம் என்று போக்குவரத்துத்துறை கூறியுள்ளது.

 

Related posts

மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!

மாநில ஜூனியர் தடகள போட்டி நாளை தொடக்கம்