அட்சய கோட்சாரம்

`கோ’’ = என்றால் இறைவன் கோள்கள் என்பது கிரகங்கள்.“சாரம்’’ = என்றால் நகருதல், இறைவன் வான்வெளி மண்டலத்தில் சீரான தன்மையில் சுற்றிக் கொண்டிருக்கும் கிரகங்கள் மூலமாக, நமது பூர்வ புண்ணிய கர்ம வினைகளுக்கு ஏற்ப நன்மை தீமைகளை ஏற்படுத்தக் கூடிய கிரக இயக்கங்களின் நிகழ்வே கோட்சாரம் என்பது.ஐயா திரு பொதுவுடை மூர்த்தி அவர்களின் கண்டுபிடிப்பின்படி, எனது லக்னமும் வளர்கிறது, ராசியும் வளர்கிறது, சூழ்நிலைகளும் மாற்றம் அடைகிறது. காலத்திற்கு ஏற்ப வசதிக்கேற்ப தண்டனை கொடுக்கக்கூடியதும், நல்லது கெட்டதுகளை அனுபவிக்க செய்வதும் கோட்சாரம். ஜனன ஜாதகம் மாறாது, தசா புத்திகளும் மாறாது, ஆனால், இந்த கோட்சார கிரகங்கள் அன்றைய நிகழ்வுகளை மாற்றிக் கொடுக்கும். பிறக்கும் போது உள்ள கிரகங்களின் தன்மைக்கும் நடப்பு கால கிரகங்களின் தன்மைக்கும் ஒப்பீடு செய்து நமது வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ளுதல் இந்த காலகட்டத்தில், இது இது நடக்க வேண்டும் என்பதுதான் விதி. லக்னம் என்ற விதியையும், ராசி என்ற மதியையும் சேர்த்து, கதி என்ற நிலையை அடைய வைப்பது கோட்சாரமே.

ஜாதகத்தில் கிரகங்கள் மாறாது. ஆனால் கோட்சார கிரகங்கள் ஜாதகரின் நிலையை காண்பித்துக் கொடுக்கும். ஜாதகரின் செயலுக்குரிய நல்வினை, தீவினைகளை கோட்சார கிரகங்கள் மூலமாக நிவர்த்தி செய்து கொள்ளும். குருவுக்கு நீங்கள் பரிகாரம் செய்தால், அந்த குரு நல்ல நிலையில் வரும்போது யோகத்தைச் செய்யும். குருவின் ஸ்தானத்தில் ஒரு பெரியவருக்கு உதவி செய்தால், அந்த குரு ஏதோ ஒரு வகையில் அந்த பலனைத் திருப்பிக் கொடுக்கும். இதுதான் கோட்சார கிரகம். தற்காலத்தில் நடக்கக்கூடிய நல்ல, தீய செயல்களின் பிரதிபலனை லக்ன தசா புத்தி களின் கிரகங்கள் யார் மூலமாக நடத்துவார்கள் என்றால், கோட்சார கிரகங்களின் தன்மைகளை வைத்து நடத்துவார்கள். கோட்சார கிரகங்களை நாம் எந்த அளவிற்கு பலமாக பிடிக்கிறோமோ அந்த அளவிற்கு வாழ்க்கையில் வெற்றி பெறலாம். உதாரணமாக, அட்சய லக்னம் மேஷமாக இருந்து ஒன்பதில் குரு இருக்கும்போது நீங்கள் ஒரு ஆசிரியரை வணங்க வேண்டும் என்ற விதி இருக்கிறது. அந்த ஆசிரியர் உங்கள் கண் முன்னாடி வந்து நின்றால், அவரை வணங்க வேண்டும். அப்படி வணங்கினால் இந்த கோட்சார குரு பலமான ஒரு வாய்ப்பை உங்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும். மாறாக இவர் ஆசிரியர் தானா என்று நான் திரும்பிச் சென்றால், அந்த குருபகவான் எதிர்பார்த்த யோகத்தைச் செய்ய மாட்டார்.

ALP மேஷ லக்னத்தில் குரு செல்லும்போது, ஒருவர் பரிகாரம் செய்து நல்ல யோகத்தை பெற வேண்டும். அதை யார் செய்ய முடியும் என்றால், அந்த குருவுக்கு நல்ல செயல்களை செய்து அப்பா, அம்மா, கடவுள், வழிகாட்டி இவர்களுக்கெல்லாம் நல்லது செய்து ஒரு வாய்ப்பை பயன்படுத்தி இருந்தால் கோட்சார கிரகங்கள் பலமாக இயங்கி யோகத்தைச் செய்யும்.கோட்சார கிரகங்கள்தான் நன்றாக இயங்கவில்லை ஏனென்றால், உதாரணமாக, ஒரு மாதம் முன்பு நான் ஒரு பெரிய மரத்தை வெட்டிவிட்டேன் என்று சொன்னால், இந்தச் செயலை அவர் எப்போது செய்திருப்பார் என்றால், கோட்சார செவ்வாய் ஆறாமிடத்தில் வரும்போதும், எட்டாமிடத்தில் வரும்போதும், பத்தாமிடத்தில் வரும் போதும் வெட்டி இருப்பார். அடுத்து பதினோராம் இடம் வரும்போது கிடைக்கும் லாபம் அதனால் தடைபடும். செவ்வாயால் வரக் கூடிய லாபம், யோகம் கிடைக்காது. இப்படி ஒவ்வொரு நிகழ்வுகளும் நமது வாழ்க்கையோடு கோட்சாரமே சம்பந்தப்படுத்துகிறது.

 

Related posts

அருளும் பொருளும் வாரி வழங்கும் ஆடி மாத திருவிழாக்கள்

ராஜகோபுர மனசு

அறச்சலூர் அறச்சாலை அம்மன்