அட்சய திருதியைக்கு புதிய ரக நகைகள் நல்லியில் அறிமுகம்

சென்னை: நல்லி குழும துணைத் தலைவர் நிரந்த் நல்லி கூறியிருப்பதாவது: திருமணம் மற்றும் விழாக் காலத்துக்கான தங்க நகைகளில் நடப்பு பாணிகளாவது ஆரம், அட்டிகை, ஜிமிக்கி கம்மல், ஒட்டியாணம், வங்கி மற்றும் ெநத்திச் சுட்டி போன்ற பழமை நகைகளாகும். இந்த அட்சய திரிதியைக்கு நாங்கள் புதிய ரக ஆரம், அட்டிகை, வளையல், ஜிமிக்கி கம்மல் ஆகிய தொகுப்பு மொத்த எடை சுமார் 80 கிராம் என அறிமுகப்படுத்தியிருக்கிறோம்.

12 கிராம் முதல் தொடங்கும் கருப்பு நூலிழையுடன் எலக்ட்ரோபார்மிங் அட்டிகை, மேலும் எலக்ட்ரோபார்மிங் குண்டு மாலையும், எலக்ட்ரோபார்மிங் குண்டுகளுடன் பிரத்யேக இழைப்பு மற்றும் வடிவ சின்தடிக் பச்சை மணி மாலை, எலக்ட்ரோபார்மிங் சிறப்பு வேலைப்பாடு யானை அட்டிகை தொகுப்பு, எலக்ட்ரோபார்மிங் இலகு எடை ரக கம்மல்கள் மற்றும் ஜிமிக்கிகள், இலகு எடை ரகங்களில் தங்க சங்கிலியில் பிரத்யேக திருஷ்டி கண் பதக்கம். பிரத்யோக இலகு எடை தாயத்து கைச்சங்கிலி, பதக்கத்துடன் கூடிய இலகு எடை முத்துமாலை, பிரத்யேக பெரிய அளவு முத்து கம்மல்கள், இலகு எடை வளையல் ரகம் மற்றும் அட்டிகை, மஞ்சள் மற்றும் பழமை மெருகு ஆரம் மற்றும் அட்டிகைகளின் சிறப்பு ரகங்கள், சிறப்பு வார்ப்பிலான கைவினை கம்மல்கள், வைர நகை, அட்டிகை, கம்மல்கள், மோதிரம் மற்றம் இலகு எடை கைச்சங்கிலி மற்றும் வைர காரட் மேற்கூறியவை அனைத்தும் அட்சய திருதியைக்காக புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

Related posts

தீபாவளி முன்பதிவு – காலியான டிக்கெட்டுகள்

விஜய் மல்லையாவுக்கு பிடிவாரண்ட்

அதானி குழுமம் மீது ஊழல் புகார் கூறிய ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்துக்கு செபி நோட்டீஸ்