கிழக்கு கடற்கரை சாலையில் அக்கரை – மாமல்லபுரம் இடையே உள்ள சாலைக்கான சுங்கக் கட்டணம் இன்று நள்ளிரவு முதல் உயர்வு!!

சென்னை: கிழக்கு கடற்கரை சாலையில் அக்கரை – மாமல்லபுரம் இடையே உள்ள சாலைக்கான சுங்கக் கட்டணம் இன்று நள்ளிரவு முதல் அதிரடியாக உயர்கிறது. அதன்படி, கார், ஜீப், 3 சக்கர வாகனங்களுக்கு ரூ.1 முதல் ரூ.68 வரை கட்டண உயர்ந்துள்ளது. இலகு ரக வணிக மற்றும் சரக்கு வாகனங்களுக்கு ரூ.2 முதல் ரூ.110 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. உள்ளூர் வணிகத்துக்கு பயன்படுத்தப்படும் சரக்கு ஆட்டோ, டாக்சி, மேக்சி கேப், 3 சக்கர வாகனங்களுக்கான மாதாந்திர கட்டணம் ரூ.245-ஆக உயர்ந்துள்ளது.

இலகு ரக வணிக வாகனம், ஜே.சி.பி., கிரேன் உள்ளிட்ட வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் ரூ.310-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த உயர்த்தப்பட்ட சுங்கக்கட்டணம் என்பது இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வர உள்ளது.இந்த அதிகரிக்கப்பட்ட சுங்கக்கட்டணம் என்பது அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள முக்கிய நெடுஞ்சாலையில் ஒன்று ஈசிஆர் எனும் கிழக்கு கடற்கரை சாலை. இந்த சாலையில் சென்னை அக்கரை – மாமல்லபுரம் இடையே 30 கிலோமீட்டர் தொலைவுக்கு சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

தூத்துக்குடியில் 3.5 கிலோ கஞ்சா பறிமுதல்

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி திருமஞ்சன திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது