பிப்.16ல் உபியில் நுழையும் ராகுல் யாத்திரையில் பங்கேற்கிறார் அகிலேஷ்

லக்னோ: காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை மேற்கொண்டுள்ளார். மணிப்பூரில் தொடங்கிய இந்த யாத்திரை தற்போது ஒடிசாவை அடைந்துள்ளது. பிப்.16ல் உத்தரபிரதேச மாநிலத்தில் நுழைய உள்ளது. இந்த யாத்திரையில் பங்கேற்கும்படி சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவிற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த அழைப்பை ஏற்று ராகுல்காந்தி யாத்திரையில் பங்கேற்கப்போவதாக அகிலேஷ்யாதவ் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,’ அமேதி அல்லது ரேபரேலியில் நடக்கும் ராகுல் யாத்திரையில் நான் கலந்து கொள்வேன். ராகுல் யாத்திரை உத்தரபிரதேச மாநிலத்திற்குள் நுழையும் போது சமாஜ்வாடி தொண்டர்களும் அதில் கலந்து கொண்டு பிரமாண்ட வரவேற்பு அளிப்பார்கள் என்றார்.

Related posts

தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

திமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் விக்கிரவாண்டியில் திண்ணை பிரசாரம்: விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி அறிவிப்பு

வெளிநாடு செல்லும் அண்ணாமலை; தமிழக பாஜவை நிர்வகிக்க கமிட்டி அமைக்க திட்டம்: தேர்தலில் வேலை செய்யாதவர் பதவியை பறிக்க முடிவு