மக்களவை தேர்தலில் படுதோல்வி எதிரொலி மாநிலங்களவை தேர்தலில் அஜித் பவார் மனைவி போட்டி

மும்பை: மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார். அண்மையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மகாராஷ்டிரா மாநிலம் பாராமதி தொகுதியில் துணை முதல்வர் அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட சரத் பவார் மகள் சுப்ரியா சுலேவிடம் தோற்றுபோனார்.

இதனிடையே மகாராஷ்டிரா, அசாம், பீகார் ஆகிய மாநிலங்களில் தலா இரண்டு மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான இடங்களும், அரியானா, மத்தியபிரதேசம், ராஜஸ்தான் மற்றும் திரிபுராவில் தலா ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடமும் காலியாக இருப்பதாக மக்களவை செயலகம் அறிவிப்பு வௌியிட்டது. இந்நிலையில் மக்களவை தேர்தலில் படுதோல்வியடைந்த சுனேத்ரா பவாரை மாநிலங்களவை தேர்தலில் நிறுத்த அஜித் பவார் முடிவு செய்துள்ளார். இதற்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியினரும் ஆதரவு தெரிவித்துள்ளதால் சுனேத்ரா பவார் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு