மனைவியை ஆதரித்து அஜித் பவார் பிரசாரம்: இது தேசத்திற்கான தேர்தல் குடும்ப உறவுக்கானது அல்ல


புனே: ‘இது தேசத்தின் எதிர்காலத்திற்கான தேர்தல். குடும்ப உறவுகளுக்கானது அல்ல’ என தனது மனைவியை ஆதரித்து அஜித் பவார் பிரசாரம் செய்தார். மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை தொடங்கிய சரத்பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் 2ம் தேதி 8 எம்.எல்.ஏ.க்களுடன் பாஜ கூட்டணிக்கு தாவிய அஜித் பவார் துணை முதல்வர் ஆகிவிட்டார். இதனால் தேசியவாத காங்கிரஸ் அஜித் பவார் அணி என்றும் சரத் பவார் அணி என்றும் இரண்டாக பிளந்தது. அஜித் பவார் அணிதான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் கட்சி என்று அறிவித்த தேர்தல் கமிஷன், கட்சியின் கடிகார சின்னத்தையும் அந்த அணிக்கு வழங்கியது.

இந்த நிலையில் பாராமதி தொகுதியில் 3 முறை எம்பி ஆக இருந்த சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அஜித் பவாரின் மனைவி சுனேத்திரா பவார் தேசியவாத காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில், அம்பேகானில் நேற்று தனது மனைவியை ஆதரித்து பிரசாரம் செய்த அஜித் பவார், ‘‘நடக்கவிருக்கும் மக்களவை தேர்தல் தேசத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கக் கூடிய தேர்தல். குடும்ப உறவுகளைப் பற்றியது அல்ல. கடந்த 15 ஆண்டுகளாக இத்தொகுதிக்கு சுப்ரியா சுலே என்ன செய்தார் என்பதை சிந்தித்து வாக்களியுங்கள்’’ என்றார்.

Related posts

சிவில் இன்ஜினியரை தாக்கிய பா.ம.க. நிர்வாகிக்கு வலை

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1038 கனஅடியாக அதிகரிப்பு

கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு 1,518 கன அடியாக குறைப்பு