காலிஸ்தான் ஆதரவாளர் குர்பத்வந்த் சிங்கைக் கொல்ல சதித்திட்டம் ?: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு சம்மன்

வாஷிங்டன் : காலிஸ்தான் ஆதரவாளர் குர்பத்வந்த் சிங் பன்னுவை கொல்ல சதி திட்டம் தீட்டப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது. காலிஸ்தான் தனி நாடு கோரும் சீக்கியர்களுக்கான நீதி என்னும் அமைப்பின் தலைவரான குர்பத்வந்த் சிங் பன்னு அமெரிக்கா மற்றும் கனடாவின் குடியுரிமையை பெற்றவர். இந்தியாவால் பயங்கரவாதி என அறிவிக்கப்பட்டுள்ள அவரை கொலை செய்ய முயற்சி நடந்ததாகவும் அதனை தாம் முரியறித்ததாகவும் கடந்த ஆண்டு பிரிட்டனில் இருந்து வெளிவரும் பைனான்ஷியல் டைம்ஸில் செய்தி வெளியானது. இதனை ஜோ பிடனின் அரசும் உறுதிப்படுத்தியது.

மேலும் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வைத்து கொலை செய்வதற்கான சதியில், இந்திய தொழில் அதிபர் நிகில் குப்தா ஈடுபட்டதாக அமெரிக்க உளவு அமைப்பு குற்றம் சாட்டியது. இந்திய அதிகாரியின் உத்தரவிற்கு இணங்க நிகில் குப்தா இந்த செயலில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து குர்பத்வந்த் சிங் பன்னு நியூயார்க் நீதிமன்றத்தில் தன்னை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக இந்தியாவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட 4 பேருக்கு சம்மன் அனுப்பி உள்ளது. இந்த வழக்கில் 3 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

ஓணம் பண்டிகைக்கு ரூ.818 கோடி மது விற்பனை: கடந்த வருடத்தை விட ரூ.9 கோடி அதிகம்

குழந்தை தொழிலாளர் விவகாரம் சமாஜ்வாடி எம்எல்ஏ நீதிமன்றத்தில் சரண்

டெல்லி முதல்வராக அடிசி நாளை பதவியேற்கிறார்: முகேஷ் புதிய அமைச்சர்