ரஷ்ய அதிபர் புதினுடன் அஜித் தோவல் சந்திப்பு


மாஸ்கோ: பிரிக்ஸ் நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டம் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடந்தது. இதில் பங்கேற்பதற்காக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷ்யா சென்றார். நேற்று நடந்த கூட்டத்தில் அஜித் தோவல் பங்கேற்றார். மாநாட்டின் இடையே பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களை அஜித் தோவல் தனித்தனியே சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள மாளிகையில் அதிபர் புதினை அஜித் தோவல் நேற்று சந்தித்தார். அப்போது, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிமுறை குறித்தும் பரஸ்பர நலன்சார்ந்த சர்வதேச விவகாரங்கள் குறித்தும் ஆலோசித்தனர்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு