விமான நிலைய விபத்துகளை தடுக்க அரசு எடுத்த நடவடிக்கை என்ன? மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி கேள்வி

புதுடெல்லி: விமான நிலையங்களில் கூரை இடிந்தது போன்ற விபத்துக்கள் நடப்பதை தடுக்க ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்று மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றத்தில் ஒன்றிய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகத்திடம் மத்திய சென்னை எம்.பியும், திமுக நாடாளுமன்றக் குழுத் துணைத்தலைவருமான தயாநிதி மாறன் எழுப்பிய கேள்விகள்:

* நாட்டின் பல்வேறு விமான நிலையங்களில், குறிப்பாக டெல்லி, குவஹாத்தி, ராஜ்கோட் மற்றும் ஜபல்பூர் ஆகிய இடங்களில் மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவங்கள் குறித்த விவரங்கள் என்ன?

* இந்த விபத்துக்களில் பதிவான இறப்புகள் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை?

* காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு ஏதேனும் வழங்கிய நிதி இழப்பீடு விவரம்?

* இந்த விபத்துகள் குறித்து அரசாங்கம் ஏதேனும் விசாரணையைத் தொடங்கியுள்ளதா மற்றும் அப்படியானால், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவரங்கள் என்ன?

* இதுபோன்ற விபத்துகள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதிசெய்ய மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளும் அதன் விவரங்களும் என்ன?‘

* ஒப்பந்ததாரர்களுக்கு தடையில்லா சான்று மற்றும் பணி நிறைவு சான்று வழங்குவதற்கு முறையான ஆய்வுகள் செய்யப்ப்படவில்லை என்பது உண்மையா மற்றும் அப்படியானால், அதன் விவரங்கள் என்ன?

* பாதிக்கப்பட்ட விமான நிலையங்களில் அடையாளம் காணப்பட்ட கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கை என்ன?

* கடந்த ஐந்தாண்டுகளில் அனைத்து விமான நிலையங்களில் நடைபெற்ற பணியின் ஆய்வுகள் ஏதேனும் தொடங்கப்பட்டுள்ளதா மற்றும் அப்படியானால், அதன் விவரங்கள் யாவை என கேள்விகளை எழுப்பினார்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு