ஏர் இந்தியா நிறுவனம் சார்பில் திருச்சி-பெங்களூருவுக்கு விமான சேவை துவக்கம்

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு விமான சேவைகளாக ஐதராபாத், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு இண்டிகோ நிறுவனத்தின் சார்பில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. உள்நாட்டு விமான சேவைகள் இண்டிகோ நிறுவனத்தின் சார்பில் மட்டுமே இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ஏர் இந்தியா நிறுவனம் திருச்சியிலிருந்து பெங்களூருவுக்கு புதிய விமான சேவையை நேற்று தொடங்கியது. இந்த விமானம் நேற்றுமுன்தினம் இரவு பெங்களூரில் நள்ளிரவு 12:15 மணிக்கு புறப்பட்டு நேற்று அதிகாலை 1.28 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்தடைந்தது.

இந்த விமானத்தில் பெங்களூருவில் இருந்து திருச்சிக்கு 30 பயணிகள் பயணம் செய்தனர். அதே விமானம் மீண்டும் திருச்சி விமான நிலையத்தில் இருந்து நேற்று அதிகாலை 3.30 மணிக்கு புறப்பட்டு காலை 4.40 மணிக்கு பெங்களூர் விமான நிலையத்தை சென்றடைந்தது. இந்த விமானத்தில் 78 பயணிகள் திருச்சியில் இருந்து பெங்களூர் நோக்கி பயணம் செய்தனர். இந்த விமான சேவை வாரத்தில் 2 நாட்கள் இயக்கப்படுகிறது. அதில் திருச்சியில் இருந்து ஒவ்வொரு வாரமும் வியாழன் மற்றும் திங்கட்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு இந்த விமானம் இயக்கப்படுகிறது. தற்போது இந்த விமானத்தில் திருச்சியில் இருந்து பெங்களூர் வரை பயணிக்க ரூ.2,200 வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக ஏர் இந்தியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

நெல்லை பூம்புகாரில் கொலு பொம்மை விற்பனை தொடங்கியது

பேருந்து நிறுத்த நிழற்குடைகளை சீரமைக்க ரூ1 கோடி ஒதுக்கீடு: சென்னை மாநகராட்சி தகவல்

கேரளாவில் இருந்து நெட்டா செக்போஸ்ட் வழியாக தனியாக வாகனங்களில் வரும் இளம் சிறார்களுக்கு அனுமதி மறுப்பு?.. காவல் துறையினர் விளக்கம்