சென்னையில் இருந்து 290 பேருடன், பாரீஸ் செல்ல இருந்த ஏர் பிரான்ஸ் விமானத்தில் திடீர் இயந்திர கோளாறால் விமானம் ரத்து

சென்னை: சென்னையில் இருந்து 290 பேருடன், பாரீஸ் செல்ல இருந்த ஏர் பிரான்ஸ் விமானத்தில் திடீர் இயந்திர கோளாறால் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இயந்திர கோளாறு சரி செய்த பிறகு ஏர் பிரான்ஸ் விமானம் நாளை அதிகாலை, சென்னையில் இருந்து பாரீஸ் செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விமானத்தில் இருந்த 276 பயணிகள், 14 விமான ஊழியர்கள் என 290 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக, தங்கள் நாட்டுக்கு செல்ல இருந்த நிலையில் விமானம் ரத்தால் பயணிகள் சென்னையில் தவித்து வருகின்றனர். சென்னையில் இன்று அதிகாலை 2:15 மணிக்கு, பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் செல்ல இருந்த விமானம், புறப்பட தயாராகிக் கொண்டு இருந்தது.

276 பயணிகளும், விமானத்தில் ஏறி அமர்ந்திருந்தனர். பணிப்பெண்கள், பொறியாளர்கள், விமானிகள் உட்பட 14 பேரும் ஏறி விட்டனர். விமானம் புறப்பட தயாராக இருந்த நிலையில் இயந்திரங்களை சரி பார்த்தபோது கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானிகள் கண்டறிந்தனர். இயந்திரம் பழுதை அடுத்து பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து கீழே இறக்கப்பட்டனர்; விமானம் ரத்து என்று அறிவிக்கப்பட்டது.

பயணிகள் அனைவரும் சொகுசு பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டு சென்னையில் உள்ள பல்வேறு ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஏர் பிரான்ஸ் விமானம் நாளை அதிகாலை, சென்னையில் இருந்து பாரீஸ் செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இயந்திர கோளாறு கண்டுபிடிக்கப்பட்டு பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதால் 290 பேர் உயிர் தப்பினர்

Related posts

சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, உடல்நலன் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5-ஆக உயர்வு

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு