ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு; சிபிஐ மனுவுக்கு பதிலளிக்க சிதம்பரத்துக்கு ஒரு வாரம் அவகாசம்: டெல்லி ஐகோர்ட் உத்தரவு

புதுடெல்லி: ஆதாரமற்ற ஆவணங்களை திரும்ப வழங்க உத்தரவிடும்படி சிபிஐ.க்கு எதிராக தாக்கல் செய்த மனுவுக்கு ஒரு வாரத்தில் பதிலளிக்கும்படி முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்திடம் இருந்து சிபிஐ பல்வேறு ஆவணங்களை கைப்பற்றியது. இந்த ஆவணங்களை சிபிஐ திரும்ப கொடுக்கும்படி ப.சிதம்பரம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த விசாரணை நீதிமன்றமும் அவற்றை வழங்க உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து சிபிஐ டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு நீதிபதி ஸ்வரணா காந்த சர்மா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஜெயின், சில நேரங்களில் ஆதாரமற்றவையாக ஒதுக்கப்படும் ஆவணங்கள், சில காலத்துக்கு பின்பு விசாரணை அமைப்புக்கு உதவக்கூடும். ,’’ என்று வாதிட்டார். இதனைத் தொடர்ந்து இது தொடர்பாக ஒரு வாரத்தில் பதிலளிக்கும்படி முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரத்துக்கு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து விசாரணையை ஜனவரி 11ம் தேதிக்கு உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Related posts

அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவர் பலி

சென்னை அருகே பீர்க்கன்கரணையில் இரட்டைக் கொலை

ஜூலை-02: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை