விமான சாகச நிகழ்ச்சி மெட்ரோவில் 4 லட்சம் பேர் பயணம்

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் நேற்று முன்தினம் விமான சாகச நிகழ்ச்சி நடந்தது. இதனால் சென்னை போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்தது. மின்சார ரயிலைப்போல் மெட்ரோவிலும் குறிப்பாக சென்னை விமான நிலையம்-விம்கோ நகர், பரங்கிமலை-சென்ட்ரல் ஆகிய இரு வழித்தடங்களில் இயக்கப்பட்ட ரயில்களில் காலை முதலே கூட்டம் நிரம்பி வழிந்தது. மெட்ரோ ரயில் நிலையங்களில் ஒரேநேரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ‘க்யூஆர்’ கோடு மூலமாக டிக்கெட் எடுக்க முயன்றதால், தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதுகுறித்து மெட்ரோ நிர்வாக அதிகாரி கூறியதாவது: பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க வண்ணாரப்பேட்டை மெட்ரோ நிலையம் – ஏஜி டிஎம்எஸ் மெட்ரோ இடையே 3.5 நிமிட இடைவெளியிலும், விம்கோ நகர் – விமான நிலையம் இடையே 7 நிமிட இடைவெளியிலும் ரயில்கள் இயக்கப்பட்டன. நேற்று (நேற்றுமுன்தினம்) ஒரே நாளில் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் பயணம் செய்துள்ளனர். மேலும் வழக்கமாக ஞாயிறு அன்று 1.7 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்வது வழக்கம். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

சந்திரயான் -5 திட்டத்துக்கு அனுமதி

234 தொகுதிக்கு பார்வையாளர்களை நியமித்தது திமுக

லடாக்கில் லேசான நிலநடுக்கம்