மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளுக்காகச் சுற்றுச்சூழல் அனுமதி கோரி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் விண்ணப்பம்

டெல்லி: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளுக்காகச் சுற்றுச்சூழல் அனுமதி கோரி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் விண்ணப்பம் சமர்ப்பித்துள்ளது. மதுரை மாவட்டம், தோப்பூரில் ரூ.1977.8 கோடி மதிப்பீட்டில் ஜப்பான் நாட்டின் நிதி உதவியோடு சுமார் 224 ஏக்கர் பரப்பளவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ளது. மருத்துவமனைக்குள் உள்நோயாளிகள், வெளி நோயாளிகள், அவரச சிகிச்சைப் பிரிவு, மருத்துவக் கல்லூரி, நர்சிங் கல்லூரி, மாணவ, மாணவிகளுக்கான விடுதி, பணியாளர்களுக்கான குடியிருப்புகள் ஆகியவை அமைய உள்ளது.

கடந்த 2018ல் அறிவிக்கப்பட்டு 2019 ஜனவரி மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். எய்ம்ஸ் அறிவிக்கப்பட்டு 4 ஆண்டுகளுக்கும் மேலாக பணிகள் துவங்காமல் இருந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இங்குள்ள தோப்பூர் காசநோய் மருத்துவமனை வளாகத்தில் உள்ள கட்டிடத்தில் சுமார் ரூ.2 கோடி செலவில் தற்காலிக நிர்வாக அலுவலகம் அமைக்கப்பட்டது. மதுரை எய்ம்ஸ் தொடர்பாக அவ்வப்போது ஒன்றிய , மாநில அமைச் சர்களால் கட்டுமானப் பணி தொடர்பாக அறிவிப்புகள் மட்டுமே வெளியாகி வருகின்றன. ஆனால், 5 ஆண்டுகளாக பணிகள் தொடங்கப்படவில்லை.

இதுவரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் சுற்றுச்சுவர் கட்டும் பணி மட்டுமே நடந்துள்ளது. இந்நிலையியில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளுக்காகச் சுற்றுச்சூழல் அனுமதி கோரி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் விண்ணப்பம் கோரியுள்ளது. தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

திருச்சியில் வாலிபர் வெட்டி கொலை தப்பிய ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ்

இலங்கை தமிழர்களிடம் லஞ்சம் வாங்கிய எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட்

சுயலாபம், அதிகார வெறிபிடித்த தலைவர்களால் அதிமுக கரைகிறது பிரதமர் முதுகில் குத்திய நம்பிக்கை துரோகி எடப்பாடி: அண்ணாமலை ஆவேச பதிலடி