எய்ம்ஸ் மருத்துவமனையில் 114 குரூப் பி, சி பணியிடங்கள்

பணியிடங்கள் விவரம்:

1. Assistant Administrative Officer: 1 இடம் (பொது). வயது வரம்பு: 21 லிருந்து 30க்குள். தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சி.
2. Assistant Stores Officer: 1 இடம் (பொது). வயது: 18 லிருந்து 35க்குள். தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் மெட்டீரியல்ஸ் மேனேஜ்மென்ட்டில் முதுநிலைப் பட்டம்/ டிப்ளமோ தேர்ச்சி.
3. Dietician: 4 இடங்கள் (பொது-3, ஒபிசி-1). வயது: 21 லிருந்து 35க்குள். தகுதி: Food Science & Nutrition/Home Science/Food and Nutrition பிரிவில் முதுநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம்.
4. Executive Assistant (N.S): 15 இடங்கள் (பொது-8, எஸ்சி-2, எஸ்டி-1, ஒபிசி-3, பொருளாதார பிற்பட்டோர்-1). வயது: 21 லிருந்து 30க்குள். தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் கணினியில் திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.

5. Junior Accounts Officer: 3 இடங்கள் (பொது-2, ஒபிசி-1). வயது: 21 லிருந்து 30க்குள். தகுதி: வணிகவியல் பாடப்பிரிவில் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம்.
6. Junior Engineer (A/C & R): 2 இடங்கள் (எஸ்சி-1, ஒபிசி-1). வயது: 30க்குள். தகுதி: எலக்ட்ரிக்கல்/மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடப்பிரிவில் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம்.
7. Junior Engineer (Civil): 2 இடங்கள் (பொது-1, பொருளாதார பிற்பட்டோர்-1). வயது: 30க்குள். தகுதி: சிவில் இன்ஜினியரிங் பாடத்தில் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம்.
8. Junior Engineer (Electrical): 2 இடங்கள் (பொது-1, ஒபிசி-1). வயது: 30க்குள். தகுதி: எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பாடத்தில் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம்.
9. Optometrist: 2 இடங்கள் (எஸ்சி-1, எஸ்டி-1). வயது: 21லிருந்து 30க்குள். தகுதி: ophthalmic techniques பாடத்தில் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம்.
10. Personal Assistant/PA to rincipal (S): 2 இடங்கள் (பொது-1, ஒபிசி-1) வயது: 18 லிருந்து 30க்குள். தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு 100 வார்த்தைகள் என்ற வேகத்தில் 10 நிமிடங்கள் சுருக்கெழுத்தில் எழுதி, அதை 40 நிமிடங்களில் ஆங்கிலத்தில் கம்ப்யூட்டரில் டைப்பிங் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
11. Technician (Prosthetics and Orthotics): 1 இடம் (பொருளாதார பிற்பட்டோர்) வயது: 21 லிருந்து 30க்குள். தகுதி: Prosthetics & Orthotics பாடப்பிரிவில் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் ஆர்சிஐ யில் பதிவு செய்திருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
12. Technicians (Laboratory): 32 இடங்கள் (பொது-15, எஸ்சி-4, எஸ்டி-2, ஒபிசி-8, பொருளாதார பிற்பட்டோர்-3). வயது: 25 லிருந்து 35க்குள். தகுதி: மெடிக்கல் லேப் டெக்னாலஜி பாடத்தில் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது எம்எல்டி யில் டிப்ளமோ தேர்ச்சியுடன் 8 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது அறிவியல் பாடத்தில் பிளஸ் 2 தேர்ச்சியுடன் OT Techniques ல் டிப்ளமோ தேர்ச்சி மற்றும் 8 வருட பணி அனுபவம்.
13. Cashier: 1 இடம் (பொது). வயது: 21 லிருந்து 30க்குள். தகுதி: வணிகவியல் பாடப்பிரிவில் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிகேஷனில் நல்ல திறன் பெற்றிருக்க வேண்டும்.
14. Laundry Supervisor: 2 இடங்கள் (பொது). வயது: 18 லிருந்து 30க்குள். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் லாண்டரி டெக்னாலஜியில் டிப்ளமோ சான்றிதழ் மற்றும் 2 வருட பணி அனுபவம்.
15. Lower Division Clerk: 26 இடங்கள் (பொது-13, எஸ்சி-5, எஸ்டி-1, ஒபிசி-5, பொருளாதார பிற்பட்டோர்-2). வயது: 18 லிருந்து 30க்குள். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு ஆங்கிலத்தில் 35 வார்த்தைகள், இந்தியில் 30 வார்த்தைகள் கம்ப்யூட்டரில் டைப்பிங் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
16. Medical Record Technicians: 10 இடங்கள் (பொது-5, எஸ்சி-2, ஒபிசி-2, பொருளாதார பிற்பட்டோர்-1). வயது: 18 லிருந்து 30க்குள். தகுதி: Medical Records பாடத்தில் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் கம்ப்யூட்டரில் அறிவுத் திறன் பெற்றவராகவும், நிமிடத்திற்கு ஆங்கிலம் 35 வார்த்தைகள், இந்தி 30 வார்த்தைகள் டைப்பிங் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
17. Stenographer: 5 இடங்கள் (பொது-2, எஸ்சி-2, ஒபிசி-1). வயது: 18 லிருந்து 27க்குள். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் என்ற வேகத்தில் 10 நிமிடங்கள் சுருக்கெழுத்தில் எழுதி, அதை 50 நிமிடங்களில் ஆங்கிலத்தில் கம்ப்யூட்டரில் டைப்பிங் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
18. Upper Division Clerk: 3 இடங்கள் (எஸ்டி-1, ஒபிசி-1, பொருளாதார பிற்பட்டோர்-1). வயது: 21 லிருந்து 30க்குள். தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் கணினியில் அறிவுத் திறன் பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் நிமிடத்திற்கு ஆங்கிலத்தில் 35 வார்த்தைகள், இந்தியில் 30 வார்த்தைகள் டைப்பிங் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

கட்டணம்: பொது/ஒபிசியினருக்கு ரூ.1000/-. எஸ்சி/எஸ்டி/ பொருளாதார பிற்பட்டோர்/ பெண்களுக்கு ரூ.500/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணம் இல்லை.
அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும். திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
https://www.aiimskalyani.edu என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: நாளை 12.10.2023.

Related posts

தமிழ்நாட்டில் உயர்கல்வியில் தரம் சரியில்லை என ஆளுநர் கூறியதற்கு அமைச்சர் பொன்முடி பதிலடி

மகாவிஷ்ணு விவகாரத்தில் நாளை மறுநாள் அறிக்கை தாக்கல் செய்யப்படும்: பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் தகவல்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 1556 கிலோ கெட்டு போன இறைச்சி பறிமுதல்