எய்ம்ஸ் கட்டுமான பணி விரைவில் துவங்கும்: மதுரையில் ஒன்றிய அமைச்சர் பேட்டி

மதுரை: மதுரையில் எய்ம்ஸ் கட்டுமான பணி விரைவில் துவக்கப்படும் என ஒன்றிய இணை அமைச்சர் தெரிவித்தார். ஒன்றிய சுகாதாரத்துறை இணை அமைச்சர் எஸ்.பி.சிங், டெல்லியில் இருந்து விமான மூலம் இன்று காலை மதுரை விமான நிலையம் வந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மதுரையில் எய்ம்ஸ் தொடர்பாக நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வந்துள்ளேன். அதன்பின் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் நடக்கும் ஆயுஷ்மான் பிரதான் மந்திரி காப்பீட்டு திட்டம் குறித்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்கிறேன்.

மதுரையில் எய்ம்ஸ் கட்டுமான பணி விரைவில் தொடங்கப்படும். ஜே.என்.1 கொரோனா பரவல் கட்டுப்பாட்டில் உள்ளது. அதன் தாக்கமும் குறைவுதான். மருத்துவ கலந்தாய்வை ஒன்றிய அரசு நடத்த உள்ளதா என்ற கேள்விக்கு, தற்போதைக்கு ஒரே நாடு; ஒரே தேர்தல் என்கிற நிலை உள்ளது. எய்ம்ஸ் தவிர மற்ற கல்வி நிறுவனங்களில் நீட் இளநிலை பட்டதாரி, முதுநிலை பட்டதாரி தேர்வு உள்ளது. அதனடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடைபெறுகிறது என்றார்.

Related posts

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

மருதாநதி, குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் 339 ரன்களை குவித்தது இந்தியா