அதிமுக ஆட்சியில் தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகனராவ் மீது எப்பொழுது எஃப்.ஐ.ஆர். போடப்படும்?: அறப்போர் இயக்கம் கேள்வி

சென்னை: அதிமுக ஆட்சியில் தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகனராவ் மீது எப்பொழுது எஃப்.ஐ.ஆர். போடப்படும்? என்று அறப்போர் இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது. புகார் அளித்து 6 ஆண்டுகளாகியும் இன்னும் எஃப்.ஐ.ஆர். போடப்படாதது ஏன்? என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. 2017-ல் அளித்த புகாரில் முதற்கட்ட விசாரணை முடிந்த நிலையில் எஃப்.ஐ.ஆர். போடப்படவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகள் பராமரிப்பு டெண்டரை தனது சகோதரர் நிறுவனத்துக்கு ராம மோகனராவ் வழங்கியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு