அதிமுக நிர்வாகிகளுடன் 2ம் கட்ட ஆலோசனை கூட்டம் தேர்தல் தோல்வியை வெற்றிப் படிக்கட்டுகளாக நினைக்க வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி பேச்சு

சென்னை: அதிமுக நிர்வாகிகளுடனான இரண்டாம் கட்ட ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று தொடங்கியது. கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். துணைப் பொதுச் செயலாளர்கள் நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி, அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தேர்தல் தோல்விக்கான காரணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ‘‘தேர்தல் தோல்விகளை வெற்றிக்கான படிக்கட்டுகளாக நினைத்து, 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாக வேண்டும்’’ என்றார். இன்று தென்காசி, ஈரோடு தொகுதிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

Related posts

ரூ.100 கோடி நில மோசடி வழக்கு: எம்.ஆர்.விஜயபாஸ்கர் தம்பியிடம் சிபிசிஐடி கிடுக்கிப்பிடி விசாரணை

சென்னை அரசுப் பள்ளியில் பிற்போக்குத்தனமாக பேசிய மகாவிஷ்ணு கைது: ரகசிய இடத்தில் வைத்து போலீஸார் விசாரணை

எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி தமிழக மீனவர்கள் 14 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை