அதிமுக குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்தும் தளவாய் சுந்தரம் நீக்கம்

சென்னை: அதிமுக குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்தும் தளவாய் சுந்தரம் நீக்கக்கப்பட்டுள்ளார். தளவாய் சுந்தரம் மீதான புகார் குறித்து விசாரிக்க வேண்டியுள்ளதால் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக கொள்கை, கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டதாக தளவாய் சுந்தரம் மீது புகார் எழுந்தது. புகார் குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். குமரியில் ஆர்எஸ்எஸ் பேரணியை தொடங்கி வைத்ததால் தளவாய் சுந்தரம் மீது அதிமுகவினர் புகார் கூறியிருந்தனர். கன்னியாகுமரியில் ஆர்.எஸ்.எஸ். பேரணியை தொடங்கி வைத்ததால் நடவடிக்கை என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது எம்எல்ஏவாக உள்ளார் தளவாய் சுந்தரம்.

Related posts

அரியலூரில் காலணி உற்பத்தி ஆலை அமைக்க தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல்.

ஹரியானா தேர்தல் முடிவுகளை ஏற்க முடியாது: காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் பேட்டி

ஹாங்காங் சிக்ஸர் லீக் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களும் விளையாடவுள்ளதாக அறிவிப்பு