கூடாரமே காலி ஆகிறதா? அதிமுக காலை வாரிய தென் மாவட்ட தொகுதிகள்

சென்னை: அதிமுகவுக்கு காலை வாரிய தென் மாவட்ட தொகுதிகளால் அதிமுக கூடாரமே காலி ஆகும் நிலை ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர்ச்சகர்கள் தெரிவிக்கின்றனர். தென்சென்னை, கன்னியாகுமரி, புதுச்சேரி, தேனி, தூத்துக்குடி, நெல்லை மற்றும் வேலூர் ஆகிய 7 தொகுதிகளில் பிரதான கட்சியான அதிமுக டெபாசிட்டை இழந்தது. மேலும் 9 தொகுதிகளில் மூன்றாமிடத்திற்கும், 3 தொகுதிகளில்அதிமுகவின் பரிதாப நிலை தமிழக அரசியலில் தற்போது பேசும் பொருளாகியுள்ளது. மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் தேமுதிகவுக்கு 5 இடங்களும், புதிய தமிழகம் 1, எஸ்டிபிஐ 1 என 7 இடங்களை கூட்டணி கட்சிகளுக்கு அதிமுக ஒதுக்கியது. இதில் அதிமுக போட்டியிட்ட 32 இடங்களிலும் படுதோல்வி அடைந்துள்ளது. குறிப்பாக திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரியில் 4வது இடத்திற்கு அதிமுக தள்ளப்பட்டுள்ளதோடு மட்டுமல்லாமல் டெபாசிட் இழந்துள்ளது.

மதுரை தொகுதியில் 3வது இடம் கிடைத்தது. விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அதிமுக 4வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது அதிமுகவினர் மத்தியில் எடப்பாடி பழனிச்சாமி மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. விருதுநகர் தொகுதியில் மட்டுமே அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன், காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கு டப் கொடுத்தார். அதுவும் சமீபத்தில் மறைந்த விஜயகாந்த் மீதான அனுதாப ஓட்டுகள் தான் விஜய பிரபாகரனுக்கு இந்த அளவுக்கு வாக்குகளை பெற்று தந்துள்ளது. அதிமுக வாக்குகள் என பெரிய அளவில் விஜய பிரபாகரனுக்கு கை கொடுக்கவில்லை என்று அரசியல் விமர்ச்சகர்கள் தெரிவிக்கின்றனர். இந்த தேர்தல் முடிவுகள் மூலம் தென் மாவட்டங்களில் அதிமுக கூடாரமே காலியாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர்ச்சகர்கள் தெரிவிகின்றனர்.

Related posts

ஆருயிர் – அனைவரும் உயிர் காப்போம் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

திருமங்கலம் அருகே கல்வெட்டுடன் கூடிய நடுகல் கண்டுபிடிப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை: சாலை மறியலில் ஈடுபட்ட ஆதரவாளர்கள் குண்டுகட்டாக கைது..!!