மோடி, ரங்கசாமி படத்துடன் அதிமுக போஸ்டரால் பரபரப்பு

எம்ஜிஆர், ஜெயலலிதா படத்தை போட்டும், அவர்களின் வேடங்களை அணிந்தும் பாஜ ஓட்டு கேட்கும் நிலையில் அவர்கள் பாணியில் புதுவை அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுவை மாநில அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாநில செயலாளர் தமிழ் (எ) தமிழ்வேந்தன் பெயரில் பிரதமர் மோடி, முதல்வர் ரங்கசாமி, எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் புகைப்படங்களை பதிவிட்டு, பிரதமர் மோடி பாராட்டி பேசிய வாசகங்களையும் வெளியாகி உள்ள போஸ்டரில், ‘எம்ஜிஆருக்கு பிறகு தமிழகத்தில் நல்லாட்சி கொடுத்தவர் என்றால் அது ஜெயலலிதாதான்.

அவர் தன் வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களின் வளர்ச்சிக்காக அர்ப்பணித்தவர்,’ என்று பிரதமர் மோடி பேசியதை தெரிவித்துள்ளனர். மேலும் தமிழக, புதுச்சேரி ஆகிய 40 நாடாளுமன்ற தொகுதியிலும் இரட்டை இலை சின்னத்துக்கு பாஜ கூட்டணி தொண்டர்கள் வாக்களிக்க தயாராகி விட்டனர். புதுவையில் அதிமுக வெற்றியை உறுதி செய்துள்ள பாஜ கூட்டணி தொண்டர்களுக்கு நன்றி, நன்றி குறிப்பிட்டுள்ளனர். பாஜ-அதிமுக கட்சிகள் இடையிலான இந்த போஸ்டர் யுத்தம் புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு