அதிமுகவுடன் பாமக கூட்டணியா?.. அன்புமணி விளக்கம்


சென்னை: அதிமுகவுடன் பா.ம.க. கூட்டணி என்று வதந்தி பரப்ப வேண்டாம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். கூட்டணிக்காக சில கட்சிகளுடன் பேசி வருகிறோம்; அது யார் என இப்போது சொல்ல முடியாது. தற்போது வரை யாருடனும் கூட்டணி உறுதியாகவில்லை; கூட்டணி தொடர்பான பா.ம.க. நிலைப்பாட்டை நாங்கள் விரைவில் தெரிவிக்கிறோம் என கூறினார். தொடர்ந்து பேசிய அவர்; மகளிருக்கு வழங்குவதை போல் ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணம் என்ற திட்டம் அறிவிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

பாடகர் மனோவின் மகன்கள் 2 பேருக்கு நிபந்தனை முன்ஜாமின்

பழனியில் பஞ்சாமிர்தம் தயாரிக்க முழுக்க முழுக்க ஆவின் நெய்தான் பயன்படுத்தப்படுகிறது: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்

பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை : 3 பேர் கைது!!