சட்டப்பேரவையில் கடும் அமளி: அதிமுக எம்.எல்.ஏ.க்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றம்

சென்னை: சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏ.க்களை வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததில் பலர் உயிரிழந்த சம்பவம் கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தையே உலுக்கி வருகிறது. பரபரப்பான அரசியல் சூழலில் தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2-வது நாள் கூட்டம் தொடங்கியது. அதிமுக, பாமக உறுப்பினர்கள் கருப்புச்சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வந்தனர். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்புச்சட்டை அணிந்து வந்தனர்.

தொடர்ந்து கூட்டத்தொடர் தொடங்கியதும் விஷச் சாராய விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டுள்ளனர். கேள்வி நேரத்தை ஒத்திவைக்கக் கோரி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டனர். அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் இருக்கையில் அமருமாறு சபாநாயகர் அப்பாவு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவை முன்னவரை பேசவிடாமல் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. எதிர்க்கட்சி தலைவர் மட்டும் பேசலாம் மற்றவர்கள் அமைதி காக்க சபாநாயகர் வேண்டுகோள் விடுத்தார்.

சபாநாயகர் வேண்டுகோளை நிராகரித்து அதிமுக உறுப்பினர்கள் அமளியால் வெளியேற்ற உத்தரவிட்டார். சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏ.க்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். எச்சரிக்கையை மீறி தொடர்ந்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டதால் வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். அதனை தொடர்ந்து அதிமுக உறுப்பினர்களை அவைக் காவலர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றினர். இதனால் சட்டப்பேரவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

Related posts

அதானி குழுமம் மீது ஊழல் புகார் கூறிய ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்துக்கு செபி நோட்டீஸ்

வினாத்தாள் கசிவு: ம.பி.யில் 10 ஆண்டு சிறை

கென்யாவில் அரசுக்கு எதிராக போராட்டம்: 39 பேர் பலி