செல்வபெருந்தகை அதிமுக எம்எல்ஏக்கள் பேரவையில் மோதல்

சட்டசபையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தொடர்பாக அனைத்து கட்சிகளின் சார்பில் உறுப்பினர்கள் பேசினர். காங்கிரஸ் சார்பில் ெசல்வபெருந்தகை பேசினார். அப்போது, கடந்த ஆட்சியில் கொரோனா தொடர்பாக சில கருத்துகளை தெரிவித்தார். இந்த கருத்துக்கு அதிமுகவின் அனைத்து எம்எல்ஏக்களும் எழுந்து நின்று கோஷம் எழுப்பினர். இதனால், அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ‘வரலாற்றை பேச வேண்டும் என்றால் நாங்களும் பேச தயார். முன்னர் நடந்ததை பேசுவது தவறு’ என்றார்.

தொடர்ந்து செல்வபெருந்தகை பேசிய பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். தொடர்ந்து பேசிய செல்வபெருந்தகை, ‘இவங்களுக்கு மட்டும் தான் கையை காட்டி பேச தெரியுமா?’ என்றார். இதற்கும் அதிமுக எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அவையில் மீண்டும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து சபாநாயகர் பழைய கதை எல்லாம் பேச வேண்டாம். தற்போதைய நிலவரம் மட்டும் பேசுங்கள் என்றார்.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி