அதிமுக அரசியல் மாயையில் சிக்கி இருக்கிறது: பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி

சென்னை: அதிமுக அரசியல் மாயையில் சிக்கி இருக்கிறது என்று பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; அதிமுக அரசியல் மாயையில் சிக்கி இருக்கிறது. அதிமுகவில் நிலவும் மாயை மக்கள் மன்றத்தில் சென்றால் தான் விலகும். அதிமுகவில் பிளவு ஏற்பட்ட போதெல்லாம் மக்கள் சரியான தீர்ப்பை வழங்கி உள்ளார்கள். பொதுக்குழு செல்லும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை பற்றி கூறமாட்டோம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. தொண்டர்கள்தான் பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என எம்ஜிஆர் கூறியது என்ன ஆனது?.

நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா மட்டும்தான் என தீர்மானம் நிறைவேற்றினார்களே அது என்னாச்சு?. ஒருங்கிணைப்பாளரை நீக்கியது இயற்கை நீதிக்கு புறம்பானது. பொதுக்குழு உறுப்பினர்களை தலைமையே நியமிக்கிறது. ஜெயலலிதா தான் நிரந்தர பொதுச் செயலாளர் என்று கூறிய நிலையில் தற்போது புதிய பொதுச் செயலாளர் தேர்வு செய்ய அவசியம் என்ன? எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு பொதுக்குழு உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜானகி அணியில்தான் இருந்தனர். அதிமுகவில் பிளவுகள் ஏற்பட்டபோதெல்லாம் சரியான தீர்ப்பை மக்கள்தான் வழங்கி இருக்கிறார்கள். பொதுமக்களின் தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி அணியை ஏற்கவில்லை என்பதைத்தான் காட்டுகிறது.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் எடப்பாடி பழனிசாமியை மக்கள் ஏற்கவில்லை என்பதையே காட்டியது. ஈரோடு இடைத் தேர்தலில் அதிமுகவின் வாக்கு வங்கி அப்படியே இருந்தும் தோல்வியை சந்தித்தது. அதிமுக வாக்குகள் பிரியக்கூடாது என்பதற்காகத்தான் ஓ.பி.எஸ்சும், தினகரனும் வேட்பாளர்கை திரும்ப பெற்றனர். மக்கள் மன்றத்துக்கு செல்வதே தீர்வாக அமையும். எடப்பாடி பழனிசாமி நடத்தும் செயற்குழு உள்ளிட்ட கூட்டங்கள் செல்லாது. திருச்சியில் ஏப்.24-ம் தேதி மாபெரும் மாநாட்டை நடத்த உள்ளோம். திருச்சி மாநாட்டுக்குப் பிறகு மாவட்டந்தோறும் பயணம் செய்ய உள்ளோம் என்றும் கூறினார்.

Related posts

சபரிமலை வரும் பக்தர்களுக்கு 6 இடங்களில் உடனடி முன்பதிவு வசதி

திருப்பதி லட்டு விவகாரம்; பவன் கல்யாண் நவ. 22ல் கோர்ட்டில் ஆஜராக சம்மன்

ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்ட பிறகு காசா போரை நிறுத்த மீண்டும் முயற்சி: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் இஸ்ரேல் வருகை