அதிமுக பொதுக்குழு தீர்மானம் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கில் 3ம் நாள் விசாரணை நிறைவு: வழக்கின் முடிவு ஜூன் 8ம் தேதிக்கு ஒத்திவைப்பு

சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு ஜூன் 8ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு தீர்மானம், பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கில் 3ம் நாள் விசாரணை நிறைவடைந்துள்ளது. இதனையொட்டி இந்த வழக்கின் முடிவு ஜூன் 8ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அதிமுகவின் பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது என தனிநீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அமர்வின் முன்பு ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன் உள்ளிட்டோர் தனித்தனியே வந்து மேல்முறையீடு வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்கின் விசாரணை கடந்த 20ம் தேதி தொடங்கி இன்று வரை நடைபெற்று வந்தது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் பி.ஸ்.ராமன், வைத்தியநாதன், அப்துல்சலீம் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் ஆஜராகினர். வழக்கறிஞர்கள் வாதத்தில் 2022 ஜூலை 11ல் கட்சியிலிருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், விளக்கம் கேட்டு நோட்டீஸ் எதுவும் அனுப்பப்படவில்லை எனவும் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கில் கட்சியிலிருந்து நீக்கும்போது கட்சி சட்டவிதிகளை முறையாக பின்பற்றவில்லை என்பதை தனிநீதிபதி ஒப்புக்கொண்டதாகவும் சுத்திக்காட்டினர்.

கட்சி கொள்கைகளை வகுக்க உட்சபட்ச அதிகாரம் கொண்ட பொதுக்குழுவுக்கு உறுப்பினரை நீக்க அதிகாரம் வழங்கப்படவில்லை எனவும் உரிய நடைமுறையை பின்பற்றாமல் நடவடிக்கை எடுத்ததையும் எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாகவும் உறுப்பினர் பதவியிருந்து நீக்குவதாக எப்படி கூறமுடியும் எனவும் கேள்வி எழுப்பினர்.

திமுகவுடன் இணக்கமாக செயல்படுவதாக குற்றம்சாட்டப்பட்டதாக சுட்டிக்காட்டிய ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்கள், தமிழ்நாட்டில் இரு கட்சித்தலைவர்களும் சந்திக்கும்போது பேசிக்கொள்வதே கிடையாது என்றும் விளக்கமளித்தனர்.

பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட தகுதியான தன்னை கட்சியிலிருந்து நீக்கிவிட்டு தேர்தல் நடத்தியுள்ளதாகவும், கட்சியில் ஓபிஎஸ் நீடிப்பது கட்சியின் நலனுக்கு கட்சியின் விரோதமானது என எடப்பாடி தரப்பில் எப்படி கூற முடியும் எனவும் ஓபிஎஸ் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது.

கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைத்து பொதுச்செயலாளர் பதவி கொண்டு வருவது, எடப்பாடி பழனிசாமி இடைகால பொதுச்செயலாளராக நியமித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு எதிரான போன்ற வாதங்களை முன்வைத்தனர்.

இதையடுத்து உயர்நீதிமன்றத்தின் கோடைவிடுமுறைக்கு பின்னர் இந்த வழக்கை ஒத்திவைக்கலாம் என மூத்தவழக்கறிஞர்கள் ஆலோசனை செய்து வழக்கை ஜூன் 8ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

Related posts

ஆம்ஸ்ட்ராங் படுகொலை அதிர்ச்சி அளிக்கிறது: தவெக தலைவர் விஜய்

ஹத்ராஸ் நெரிசலில் சிக்கி 123 பேர் உயிரிழந்த சம்பவத்தில் சாமியாரின் உதவியாளர் கைது

திருச்சி மாவட்டம் பாடாலூர் அருகே இன்று அதிகாலை விபத்து: காரில் பயணித்த பெண் பலி