அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் தம்பி மேலும் ஒரு வழக்கில் கைது

கரூர்: கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த தொழிலதிபர் பிரகாஷிடம் ரூ.100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை அபகரிப்பு மற்றும் கொலை மிரட்டல் புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், உறவினர் பிரவீன் (28), உடந்தையாக இருந்த வில்லிவாக்கம் இன்ஸ்பெக்டர் பிரித்விராஜ் ஆகியோர் சிபிசிஐடி போலீசாரால் கடந்த ஜூலை 16ம்தேதி கைது செய்யப்பட்டனர்.

இதே வழக்கில் கடந்த 2ம் தேதி எம்.ஆர்.விஜயபாஸ்கரின் தம்பி சேகரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில், பிரகாஷ் கொடுத்த புகாரின்பேரில் சேகர் மீது கொலை மிரட்டல் வழக்குப்பதிந்து வாங்கல் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் சிறையில் இருந்த சேகரை நேற்றுமுன்தினம் கைது செய்தனர்.

Related posts

கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் மருத்துவ உதவி நிதியாக 8 பேருக்கு ரூ.2 லட்சம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

தமிழகத்தில் 4 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு

யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு: 23ம் தேதி கவுன்சலிங் தொடக்கம்